விருதுநகர் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி


விருதுநகர் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
தினத்தந்தி 1 Sept 2022 9:15 AM IST (Updated: 1 Sept 2022 9:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்,

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் நடந்த சப்பரம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வளைவில் திருப்பிய போது மரத்தின் மீது மோதியதில் விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரில் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story