அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல்காந்திக்கு நோட்டீஸ்
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் துக்ளக் சாலை பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் ராகுல்காந்தி தற்போது வசித்து வரும் நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்தை அடுத்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற வகையில் ராகுல்காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story