இரட்டை இலை சின்னத்தை முடக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


இரட்டை இலை சின்னத்தை முடக்ககோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு
தினத்தந்தி 6 July 2022 7:09 PM IST (Updated: 6 July 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சினையில் சிக்கி உள்ள அதிமுகவின் சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவில் நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை வருகிறது.


Next Story