அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு


அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு  வாய்ப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 4:37 PM IST (Updated: 19 Jun 2023 5:11 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குவங்கக்கடல்மற்றும்அதனைஒட்டியமத்தியமேற்குவங்கக்கடல்பகுதிகளில் ஒருமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர், குமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகங்கள் திட்டம் என கூறப்படுகிறது. பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'


Next Story