திருமலையில் இறைச்சி சாப்பிட்ட நரிக்குறவர்கள் கைது
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்துக்களின் புனித தலமாகக் கருதப்படுகிறது. எனவே திருமலையில் இறைச்சி, மீன், முட்டை, மதுபானம் உள்ளிட்டவை பயன்படுத்தவோ, சாப்பிடவோ கூடாது.
இந்தநிலையில் திருமலையில் நரிக்குறவர்கள் கடைகள் வைத்திருக்கும் பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் இறைச்சி சாப்பிடுவதகாக திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆண், ெபண்ணை பிடித்து திருமலை 2-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். 2 நரிக்குறவர்களை போலீசார் கைது செய்து இறைச்சி எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
திருமலைக்கு வருவதற்கு முன் அலிபிரி டோல்கேட்டில் அனைவரும் முழுமையாகச் சோதனை செய்யப்படுகின்றனர். நரிக்குறவர்கள் திருமலைக்கு இறைச்சியை கொண்டு வந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை? எனக் கேள்வி எழுந்துள்ளது.