கடைசி டெஸ்ட்: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு


கடைசி டெஸ்ட்: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 1 July 2022 9:10 AM GMT (Updated: 2022-07-01T14:47:43+05:30)

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் மட்டத்தில் கொரோனா ஊடுருவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் தான் தற்போது நடக்க உள்ளது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story