தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை


தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 24 April 2023 3:51 PM IST (Updated: 24 April 2023 3:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தொடா்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலும் அன்பரசன், கணேசன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி, ஐஎண்டியூசி உள்பட 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.


Next Story