3 ஆவது டி20: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு


3 ஆவது டி20: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 14 Jun 2022 1:15 PM GMT (Updated: 2022-06-14T18:58:26+05:30)

இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

விசாகப்பட்டினம்,

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும்.

இந்த இக்கட்டான சூழலில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story