ரஜினிகாந்த் மகளின் நகைகள் கொள்ளை - திடீர் திருப்பம்: 200 சவரன் கொள்ளை போனதாக புதிய புகார்...!
ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 200 சவரன் நகைகள் கொள்ளை என புதிய புகார் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ளார்.ஏற்கனவே 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் புதிய புகாரை ஐஸ்வர்யா அளித்துள்ளார்.
எவ்வலவு நகைகள் திருட்டுபோனது என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க ஐஸ்வர்யாவிடம் போலீசார் கூறியிருந்தநிலையில் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக என புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். முதலில் 60 சவரன் நகைகள் திருட்டு போனதாக ஐஸ்வர்யா புகார் தந்த நிலையில் 100 சவரன் நகைகள் மீட்கபட்டுள்ளனர்.
தனது வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக ஐஸ்வர்யாவின் புகாரில் தேனாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 143 சவரன் நகைகள் கைப்பற்ற நிலையில் தற்போது புதிய புகாரை ஐஸ்வர்யா அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.