அ.தி.மு.க.வை தன்வசப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க.வை தன்வசப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 18 Aug 2022 12:09 PM IST (Updated: 18 Aug 2022 12:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன. கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பம். யார் ஒற்றை தலைமைக்கு வர வேண்டும் என கட்சியினர் எந்த கருத்தையும் கூறவில்லை. யார் ஒற்றைத் தலைமை எனக்கூறாத நிலையில் அதற்குள் பொதுக்குழு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார்.


Next Story