அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றக்கோரிய வழக்கு - நாளை விசாரணை


அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றக்கோரிய வழக்கு - நாளை விசாரணை
x
தினத்தந்தி 13 July 2022 2:24 PM GMT (Updated: 13 July 2022 2:42 PM GMT)

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் - ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐக்கோர்ட் நாளை விசாரிக்கிறது.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன.

இதனிடையே, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்திற்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை ஐக்கோர்ட்டில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரிக்க உள்ளார்.


Next Story