வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் திருட்டுபோனது.
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் திருட்டு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடியை சேர்ந்தவர் பாபுராஜ்(வயது 50). இவர் சம்பவத்தன்று இரவில் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரியா. இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அந்த வீட்டில் பீரோவை உடைத்து 6 கிராம் தங்க நகையை திருடிச்சென்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com