தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..,?

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..,?
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை யில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

முதன் முறையாக கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டது. இடை இடையே தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கும், ஒரு பவுன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com