தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com