தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும் ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560 (இன்று)

06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (நேற்று முன்தினம்)

05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440

04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840

03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com