தொடர்ந்து சரியும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,840 வீழ்ச்சி - இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,840 வீழ்ச்சி - இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், கடந்த 1ம் தேதி அதிரடியாக குறைந்த தங்கம் விலை அதன் பின் 2 நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்டது. பின்னர் 2 நாட்களாக மீண்டும் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.280-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது.

தங்கம் விலை

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (இன்று)

05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440 (நேற்று)

04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840

03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com