பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 90 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 8 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 95 ரூபாய் 47 காசுக்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.93.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியும், கவலையும் அடைய செய்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com