கன்னியாகுமரி மக்களை பாஜக நேசிக்கிறது. திமுக... ... இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்: பிரதமர் மோடி
x
Daily Thanthi 2024-03-15 07:13:46.0
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மக்களை பாஜக நேசிக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.

ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். பாஜகதான் பெண்களுக்கு தனி மதிப்பு கொடுக்கும் கட்சி. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும்- பிரதமர் மோடி

1 More update

Next Story