சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 08:04:02.0
t-max-icont-min-icon

சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன அதிபரை சந்தித்து பேசிய பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன்பின் சீன அதிபரும் அமெரிக்கா வருகிறார். சீனாவுக்கு கண்ணி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம். விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story