நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
Daily Thanthi 2025-04-02 04:16:04.0
t-max-icont-min-icon

நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story