கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
x
Daily Thanthi 2025-11-05 09:39:24.0
t-max-icont-min-icon

கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது

கோவாவின் வடக்கு பகுதியில் பாகா மற்றும் அர்போரா ஆகிய 2 கடற்கரை கிராமங்களில் உள்ள 2 கடைகளில், எல்.இ.டி. விளம்பர பலகைகளில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அந்த கடைகளில் இருந்த எல்.இ.டி. பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அதே சமயம் 2 கடைகளிலும் ஒரே நேரத்தில் எல்.இ.டி. விளம்பர பலகையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தோன்றியுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story