தாமதமாகும் வலிமை ரிலீஸ்


தாமதமாகும் வலிமை ரிலீஸ்
x
தினத்தந்தி 16 Sep 2021 9:31 AM GMT (Updated: 16 Sep 2021 9:31 AM GMT)

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு முடிந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தீபாவளியில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் வெளியாக உள்ளதால் இரண்டு படங்களின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பதிலாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த படம் வெளியாகும் நாளில் வலிமை படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளி வைக்க யோசிப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்தில் நாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். வினோத் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வரும் அஜித்குமார் தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். நாங்க வேற மாதிரி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Next Story