பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய நடிகரின் மனு தள்ளுபடி

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய நடிகரின் மனு தள்ளுபடி
Published on

பெரும்பாவூர்,

மலையாள பிரபல நடிகர் சியாஸ் கரீம். இவர் மீது கோழிக் கோட்டை சேர்ந்த இளம்பெண் எர்ணாகுளம் மாவட்டம் பாலாரி வட்டம் போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த 2024-ம் ஆண்டு தன்னை காதலிப்பதாக நடிகர் சியாஸ் கரீம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் ரியாஸ் கரீம் முன் ஜாமீன் கேட்டு எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com