நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை - ஆண்ட்ரியா

முழுமையான காமெடி படத்தில் நடித்தது கிடையாது என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நடிப்பு தாண்டி பாடகியாகவும் கலக்கி வருபவர், ஆண்ட்ரியா. படங்கள் நடிப்பது போக, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பாடல் கச்சேரிகளும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம், 'என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா "காதல், ரொமான்ஸ், ஆக்சன் என எல்லாமே பண்ணிவிட்டேன். ஆனால் முழுமையான காமெடி படத்தில் நான் நடித்தது கிடையாது. நடித்த படங்களிலும் பெரியளவில் காமெடி செய்தது கிடையாது. அந்த வகையில் ஒரு நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது நடக்குமா? என்று பார்க்கலாம்" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com