'தி கோட்' படத்தில் தோனி? - டிரெய்லரில் கசிந்த சின்ன வார்த்தை


Dhoni in vijays The Goat? - A little word leaked in the trailer
x
தினத்தந்தி 18 Aug 2024 8:19 AM IST (Updated: 18 Aug 2024 8:21 AM IST)
t-max-icont-min-icon

'தி கோட்' டிரெய்லரில் தோனியை சுட்டி காட்டும் குறிப்புகள் இருப்பதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அடுத்த மாதம் 5-ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து, இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் 2 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த டிரெய்லர் வெளியாகி குறைவான நேரத்தில் 1.5 கோடி பார்வையாளர்களை கடந்தது

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் விஜய்யின் 'தி கோட்' பட டிரெய்லரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சுட்டி காட்டும் குறிப்புகள் இருப்பதை தோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த டிரெய்லரில் விஜய் அணிந்திருந்த சட்டையில் தோனி கூறிய 'டெபனட்லி நாட்' என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. மேலும், டிரெய்லரில் இடம் பெற்றிருந்த 'லயன் இஸ் ஆல்வேஸ் லயன்' என்ற வார்த்தையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


Next Story