இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதியின் மகள் பெயர் மியூ!

அட்லீ தனது நீண்டகால காதலியான ப்ரியாவை 2014 ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதியின் மகள் பெயர் மியூ!
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார். இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் அட்லீக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் அட்லீ. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்து, அங்கேயும் தான் ஒரு ஹிட் இயக்குநர் என்று நிரூபித்து விட்டார் அட்லீ. தற்போது அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான ‘ராக்கா’வை இயக்கிவருகிறார்.

அட்லீ தனது நீண்டகால காதலியான ப்ரியாவை 2014 ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இத்தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் இணைந்து இன்ஸ்டா பக்கத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதில், எங்கள் காதல் கலைக்கு இப்போது ஒரு பெயர் கிடைத்துள்ளது.

மியூ - அழகு, மென்மை & அன்பு. அன்புடன் மீர், பிரியா & அட்லீ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தம்பதி தங்கள் முதல் குழந்தையான ஆண் குழந்தைக்கு மீர் என பெயர் சூட்டியிருந்த நிலையில் இரண்டாவது பிறந்த பெண் குழந்தைக்கு மியூ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com