4 நாட்களில் “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் கடந்த 17ந் தேதி வெளியானது.
4 நாட்களில் “மிஸ்டர் எக்ஸ்”  திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com