ஜீவா நடித்த “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

எம் ராஜேஷ் இயக்கிய ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தில் ஜீவா, இவானா நடித்துள்ளனர்.
ஜீவா நடித்த “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
Published on

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா, தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜீவாவின் 47வது படமாக உருவாகி வருகிறது.

முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலீசுக்கு தயாராகும் படம்

நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நாளை மாலை வெளியாகும் பர்ஸ்ட் லுக்

இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சிவா மனசுல சக்தி’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com