4வது குழந்தை பெற்றெடுத்தார் வொண்டர் வுமன் நடிகை

வொண்டர் வுமன் பட நடிகை 4வது குழந்தை பெற்றெடுத்தார்.
4வது குழந்தை பெற்றெடுத்தார் வொண்டர் வுமன் நடிகை
Published on

வாஷிங்டன்,

2017ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வொண்டர் வுமன். இத்திரைப்படத்தில் நடிகை ஹால் ஹடொட் முக்கிய கதாப்பாத்திரமான வொண்டர் வுமனாக நடித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நடிகை ஹால் ஹடொட் திரைப்பட தயாரிப்பாளரான ஜரோன் வர்சனாவை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அல்மா, மாயா, டனிலயா என 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஹால் ஹடொட் மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு தற்போது 4வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹல் ஹடொட் தனது 4வது மகளுக்கு ஓரி (எனது ஒளி) என்று பெயர் சூட்டியுள்ளார். 4வது குழந்தை பெற்றெடுத்த வொண்டர் வுமன் பட நடிகை ஹால் ஹடொட்டிற்கு ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com