

சசிகுமார், சிம்ரன் நடித்து வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இவர், தற்போது ’வித் லவ்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் புரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு நேர்காணலில் பேசிய அனஸ்வரா ராஜன்.