நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் - சம்யுக்தா விஸ்வநாதன்

நடனம் என்ற அடையாளத்தை தாண்டி நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் ன்று சம்யுக்தா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்புவின் மகள் அனந்திதா தயாரித்து, அஷ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து சம்யுக்தா விஸ்வநாதன் கூறும்போது, "சாய் அபயங்கரின் 'கட்சி சேர...' இசை ஆல்பத்தின் (2023) மூலம் எனது நடனம் பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இசை ஆல்பங்களும், குறும்படங்களுமே அதிகம் வந்தன. ஆனால் சினிமாவில் நடிக்கவே விரும்பினேன். 3 ஆண்டுகளாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நடித்த படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. விரைவில் அவை ஒவ்வொன்றாக வெளியாகும் என்று நம்புகிறேன்.

எனது நடனத்தை வைத்துதான் ரசிகர்கள் என்னை பார்க்கிறார்கள். இவள் நல்ல நடிகை என்று இந்த படத்தின் மூலம் இனி ரசிகர்கள் சொல்வார்கள். நடனம் என்ற அடையாளத்தை தாண்டி நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்” என்றார்.

சந்தோஷ் கூறும்போது, “ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் ‘டபுள் ஆக்குபன்சி' எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்று நம்புகிறேன்”, என்று குறிப்பிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com