'தி கோட்' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? - வெளியான பரபரப்பு தகவல்


தி கோட் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? - வெளியான பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2024 1:50 PM IST (Updated: 28 Jun 2024 2:00 PM IST)
t-max-icont-min-icon

'தி கோட்' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22-ம் தேதி தி கோட் படக்குழு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, படத்தின் 2-வது பாடலும் வெளியானது.

இந்நிலையில், 'தி கோட்' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், ஒரு காரின் கண்ணாடி வழியாக சில ரஷிய வார்த்தைகள் பிரதிபலிக்கும். அதற்கு தமிழில், 'இந்திய போலீஸ் அதிகாரி, திரும்பிப் போ" என்று அர்த்தமாம். இதையடுத்து, விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story