சூர்யாவுக்கு குரல் கொடுத்த கார்த்தி - எந்த படத்தில் தெரியுமா?
சூர்யா நடித்த இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு கார்த்தி டப்பிங் பேசியிருந்தார்.
சென்னை,
சூர்யா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'மாற்றான்'. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தனித்துவமான கதையால் கவனம் பெற்றது.
இப்படம், தெலுங்கில் 'பிரதர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. இதில், சூர்யாவின் ஒரு கதாபாத்திரத்திற்கு கார்த்தி டப்பிங் பேசினார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். அதில் வரும் அகிலனுக்கு சூர்யாவும் விமலனுக்கு கார்த்தியும் குரல் கொடுத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா, தெலுங்கில் டப்பிங் பேசிய முதல் படம் இதுவாகும். அந்த நேரத்தில், சிங்கம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்திருக்கிறார் சூர்யா. இதன் காரணமாக தெலுங்கு பதிப்பிற்கு கார்த்தி டப்பிங் பேசியிருக்கிறார்.
Related Tags :
Next Story