’கருப்பு’ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி

கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
’கருப்பு’ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி
Published on

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேவேளை, படத்தின் டிரெய்லர் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ’கருப்பு’ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படத்தின் டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ’கருப்பு’ படத்தின் டிரெய்லர் தயாராகிவிட்டது, விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com