திரையில் 50 நாட்களை கடந்த கென் கருணாஸின் “யூத்”

கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.82 கோடி வசூல் செய்துள்ளது.
திரையில் 50 நாட்களை கடந்த கென் கருணாஸின் “யூத்”
Published on

சென்னை,

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இவர் தற்போது ‘யூத்’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.82 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கென் கருணாஸின் ‘யூத்’ படம் 50 நாட்களை கடந்துள்ளது. இதையொட்டி ‘யூத்’ படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com