மகள் பிறந்த பின்...முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய கியாரா அத்வானி

நடிகை கியாரா அத்வானி தனது மகள் பிறந்த பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.
சென்னை,
நடிகை கியாராவுக்கும்- நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தங்கள் மகளின் பெயரை அறிவித்தனர்.
இந்நிலையில், மகள் பிறந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கியாரா பொது வெளியில் தோன்றினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கர்ப்பமாக இருந்தபோது, அவரது இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று ஜனவரியில் ராம் சரண் நடித்த “கேம் சேஞ்சர்”, மற்றொன்று ஆகஸ்ட் மாதம் வெளியான “வார் 2”. இரண்டுமே பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தன.
கியாரா அடுத்த ஆண்டு முதல் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளள யாஷின் பான்-இந்திய படமான “டாக்ஸிக்” படப்பிடிப்பை அவர் ஏற்கனவே முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






