‘லோகா’ பட யுனிவர்ஸில் இணைந்த மம்முட்டி

அடுத்தடுத்த பாகங்களாக வெளியாக லோகா படத்தில் மம்முட்டி ‘மூத்தன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூப்பர்வுமன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், நடிகர் மம்முட்டி லோகா படத்தின் யுனிவர்ஸில் இணைய உள்ளார். அதாவது, அடுத்தடுத்த பாகங்களாக வெளியாக லோகா படத்தில் ‘மூத்தன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் மும்முட்டியின் பிறந்தநாளுக்கு லோகா படக்குழு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட போஸ்டரில், பிறந்தநாள் வாழ்த்துகள் மூத்தன் ('Happy Birthday Moothon') என்று குறிப்பிட்டிருந்தனர்.






