’மங்காத்தா 2’ - அர்ஜுன் உடைத்த ரகசியம்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

இது தற்போது அஜித் ரசிகர்களிடையே மங்காத்தா 2 குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
’மங்காத்தா 2’ -  அர்ஜுன் உடைத்த ரகசியம்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், அஜித்தின் 50-வது படமாக அமைந்து பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் இசை மற்றும் பின்னணி இசைக்காகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

Also Read
திரைக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவு: 'பாசமலர்' ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட 'வாடாமலர்'!
’மங்காத்தா 2’ -  அர்ஜுன் உடைத்த ரகசியம்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

இந்நிலையில், மங்காத்தா 2 குறித்து மீண்டும் வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் தாமதமாவதாகவும் அர்ஜுன் கூறி இருக்கிறார்.

மேலும், கண்டிப்பாக கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் கூறினார். இது தற்போது அஜித் ரசிகர்களிடையே மீண்டும் மங்காத்தா 2 குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அர்ஜுன் தற்போது இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ’பிளாஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com