இமாலய இலக்கை 4 நாட்களில் எட்டிய 'கல்கி 2898 ஏடி' - வசூல் எவ்வளவு தெரியுமா?


Prabhas-starrer Kalki 2898 AD crosses Rs 500 crore-mark at global box office
x
தினத்தந்தி 1 July 2024 4:40 PM IST (Updated: 1 July 2024 5:20 PM IST)
t-max-icont-min-icon

'கல்கி 2898 ஏடி' முதல் நாளிலேயே 180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

மும்பை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

இதனிடையே, கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 29-ம் தேதி வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தற்போது, இத்திரைப்படம் இமாலய இலக்கை வெளியான 4 நாட்களில் கடந்துள்ளது. அதன்படி, 'கல்கி 2898 ஏடி' உலகம் முழுவதும் ரூ. 555 கோடி வசூலித்துள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


Next Story