கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரெபா மோனிகா ஜான் – வைரலான புகைப்படங்கள்

நடிகை ரெபா மோனிகா ஜான், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரெபா மோனிகா ஜான் – வைரலான புகைப்படங்கள்
Published on

சென்னை,

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர், ரெபா மோனிகா ஜான் அதனைத் தொடர்ந்து 'தனுசு ராசி நேயர்களே', 'எப்.ஐ.ஆர்.', 'கூலி' படத்திலும் நடித்தார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ஜனநாயகன்' படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

ரெபா மோனிகா ஜான், கடந்த 2022-ம் ஆண்டில் காதலர் ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்கள் நடித்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை ரெபா மோனிகா ஜான், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com