பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். டிராகன் என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்காக ஜூனியர் என்டிஆர் வெறும் 20 நாட்களில் சிக்ஸ்-பேக் உருவாக்கியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற மே மாதம் 20ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com