விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சாய் பல்லவி?


Sai Pallavi Misses Opportunity to Star in Vikram
x

முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது

சென்னை,

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தையும் இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் , ஆனால், கால்ஷீட் காரணமாக இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story