மீண்டும் திருமண வதந்தியில் சிக்கிய சம்யுக்தா

சம்யுக்தாவின் திருமணம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீண்டும் திருமண வதந்தியில் சிக்கிய சம்யுக்தா
Published on

சென்னை,

மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு என தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். 'வாத்தி', 'விருபாக்சா' எனத் தொடர் வெற்றிகளைக் கொடுத்து திரையுலகில் 'கோல்டன் லெக்' என்று வர்ணிக்கப்படும் சம்யுக்தா குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

30 வயதாகும் சம்யுக்தா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் உலா வருகின்றன. ஏற்கனவே இது போன்ற வதந்திகள் பரவியபோது, "எனது கவனம் முழுவதும் தற்போது நடிப்பில்தான் உள்ளது, திருமணத்தைப் பற்றி யோசிக்க நேரமில்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவர் தனது திருமணத்திற்கான ரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Also Read
"குழந்தையே வேண்டாம் என்று நினைத்தேன்... ஆனால் இப்போது" - தாய்மை குறித்து நடிகை உருக்கம்
மீண்டும் திருமண வதந்தியில் சிக்கிய சம்யுக்தா

தற்போது சம்யுக்தா நடிகர் நிகிலுக்கு ஜோடியாகப் பிரம்மாண்டமாக உருவாகும் 'சுயம்பு' (Swayambhu) மற்றும் 'பிளாக் கோல்டு' (Black Gold) ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் சம்யுக்தா, மீண்டும் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்தத் திருமணப் புகார்களுக்கு எப்படி பதிலளிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com