பாலியல் புகார் விவகாரம்: பாடகி ஸ்வாகதாவுக்காக ஆதரவாத குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்

பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்துப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பாலியல் புகார் விவகாரம்: பாடகி ஸ்வாகதாவுக்காக ஆதரவாத குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்துப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தற்போது வரை பல இளம் பெண்கள் அந்த இசையமைப்பாளரால் பாதிக்கப்படுவதாக ஸ்வாகதா தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ஸ்வாகதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது முகநூல் பதிவில் முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஸ்வாகதா சொல்லும் அந்த இசையமைப்பாளரின் பாலியல் தொந்தரவுகள், தொடர்வதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், அவர் யார் என்பது உலகுக்குச் சொல்லப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்வாகதா கொடுத்த குறிப்புகளை வைத்தே காவல்துறை அந்த இசையமைப்பாளரை சில நிமிடங்களில் கண்டுபிடித்து கைது செய்ய முடியும் என்றும், இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com