சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கிறாரா சூர்யா?

சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்
சென்னை,
மலையாள சினிமாவில் இயக்குனராகவும் பிரபல நடிகராகவும் அறியப்படுபவர் பசில் ஜோசப். இவர் கோதா, மின்னல் முரளி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் நடிகர் சூர்யாவிடம் அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளதாக தெரிகிறது. இந்தக் கதை ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் எனக் கூறப்படுகிறது
தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் சூர்யாவின் பட்டியலில் உள்ளது.
இந்த படங்களை முடித்த பிறகு, சூர்யா, பசில் ஜோசப்பின் கதையில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் வருகிற மே மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.