'தக் லைப்' : 'சர்வதேச பார்வையாளர்களுக்கான சினிமா விருந்து' - பாலிவுட் நடிகர் பேச்சு


Thug Life: A cinematic feast for international audience - Bollywood actor speaks
x

'தக் லைப்' படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அலி பசல் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் அலி பசல் தமிழில் அறிமுகமாக உள்ளது பற்றி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'மணிரத்னம் சாருடன் பணிபுரிவது பெருமைக்குரிய விஷயம். இந்தப் படம் என்னை ஒரு நடிகனாக பல வழிகளில் முன்னேற்றி இருக்கிறது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச பார்வையாளர்களையும் மயக்கும். எங்களது மேஜிக்கில் உருவாகியுள்ள இப்படத்தை மக்கள் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை' என்றார்.



Next Story