காலை உணவு திட்ட சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு


காலை உணவு திட்ட சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Sept 2022 10:17 PM IST (Updated: 14 Sept 2022 11:53 AM IST)
t-max-icont-min-icon

காலை உணவு திட்ட சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் காட்பாடி காந்திநகர், சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி, கஸ்பா ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சமையல் கூடம் மூலம் 48 பள்ளிகளுக்கு காலை உணவு விநியோகிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 3,469 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இந்த நிலையில் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனியில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் கணேசங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story