மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 19 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தலைவாசலில் தலா 4 பேர், ஆத்தூரில் 3 பேர், வாழப்பாடி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஓமலூர், வீரபாண்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story