பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்.. திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

தூய்மைப்பணி நிறைவடைந்தபின் காலை 9.30 மணியில் இருந்து பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தூய்மைப்பணி
தூய்மைப்பணி
Published on

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருகிற 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. நேற்று அதிகாலையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் உள்ளிட்ட சிறப்பு வைபவங்கள் நடந்தன.

கோவில் தூய்மைப்பணி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை நடந்தது. அப்போது கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்கள் ஆகிய அனைத்தும் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. தூய்மைப்பணி முடிந்ததும் பாரம்பரிய மூலப்பொருட்கள் கலந்த புனித நறுமண நீர் கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியில் இருந்து பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com