மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கியது

பூதத்தாழ்வார் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ம் தேதி நடைபெறும்.
செங்கல்பட்டு
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில், 63வது திவ்ய தேசமாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் பூதத்தாழ்வார் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் உற்சவம் நேற்று மாலை துவங்கியது. முன்னதாக, பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து வரும் 24-ம் தேதி சூரிய பிரபை வாகனத்திலும், 26-ம் தேதி சந்திர பிரபை வாகனத்திலும், 29ம் தேதி யானை வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, 30-ம் தேதி அன்று காலை திருத்தேர் வீதி உலா நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story






